விளாத்திகுளம் அருகே பஸ்- ஆட்டோ மோதல்; பெண் பலி
விளாத்திகுளம் அருகே பஸ்- ஆட்டோ மோதிய விபத்தில் பெண் பலியானார். மகன், மகள் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே பஸ்- ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உடல்நசுங்கி ரத்தவெள்ளத்தில் பலியானார். மகன், மகள் காயமின்றி உயிர் தப்பினர்.
பஸ்- ஆட்டோ மோதல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (வயது 43). இவர் நேற்று காலை தனது மகள் சேர்மக்கனி (20), மகன் முத்துவேல் (17) ஆகியோருடன் விளாத்திகுளம் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக பனையூரில் இருந்து விளாத்திகுளத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
துளசிப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது அந்த வழியாக எதிரே விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
பெண் சாவு
இந்த விபத்தில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன், மகள் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நாகலாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் மற்றும் மகள் கண் முன்னே விபத்தில் சிக்கி தாய் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
--------------