விளாத்திகுளம் அருகேமினி லாரியில் ரகசிய அறை அமைத்துபுகையிலை பொருட்கள் கடத்தல்:வியாபாரி சிக்கினார்
விளாத்திகுளம் அருகே மினி லாரியில் ரகசிய அறை அமைத்து புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே மினி லாரியில் ரகசிய அறை அமைத்து புகையிலை பொருட்களை கடத்திய வியாபாரியை போலீசார் கைத செய்தனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கரிசல்குளம் பகுதியில் மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையோரம் சந்தேகப்படும்படியாக நின்ற மினி லாரியை சோதனை செய்தனர்.
இதில் அந்த மினி லாரியின் ெவளிப்புறத்தை விட உள்புறத்தின் நீளம் சற்று குறைவாக இருந்ததும், அதில் ரகசிய அறை அமைத்து 5 மூட்டைகளில் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
வியாபாரி ைகது
இதையடுத்து மினி லாரியில் இருந்த விளாத்திகுளத்தைச் சேர்ந்த புகையிலை வியாபாரியான ஜெயராஜை (வயது 47) போலீசார் பிடித்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மினி லாரியுடன் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து, விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஜெயராஜை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். கைதான ஜெயராஜ் மீது புகையிலை பொருட்களை கடத்தி விற்றதாக விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், பசுவந்தனை, மதுரை அவனியாபுரம், அண்ணாநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி டவுன் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.