விருத்தாசலம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்


விருத்தாசலம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
x

விருத்தாசலம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூரில் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

இதையொட்டி காலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story