சாலையில் வேரோடு சாய்ந்த வேப்பமரம்


சாலையில் வேரோடு சாய்ந்த வேப்பமரம்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகில் நெடுஞ்சாலையோரம் மிகவும் பழமையான வேப்பமரம் இருந்தது. மதுரையிலிருந்து மானாமதுரை, பரமக்குடி, ராமேசுவரம் வரை செல்லும் அரசு புறநகர் பஸ்கள், தனியார் பஸ்கள் திருப்புவனம் ஊருக்குள் வந்து இந்த நெடுஞ்சாலையின் வழியாகத் தான் செல்லும். மேலும் இந்த சாலையில் நகர், புறநகர் பஸ்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

இந்த நிலையில் நேற்று காலை சாலையோரமாக இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. நல்லவேளை அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்வவில்லை. நடுரோட்டில் வேப்பமரம் விழுந்ததால் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. மேலும் அருகில் சென்ற மின் வயரில் வேப்பமரம் கிளைகள் விழுந்ததால் மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

பின்பு நெடுஞ்சாலை துறையினர் எந்திரங்களின் உதவியுடன் வேப்ப மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் மரம் அகற்றப்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கியது.


Next Story