அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்


அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூரில் அ.தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர், மோர் பந்தல் தொடங்கப்பட்டது. விழாவிற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அனைவருக்கும் இளநீர், தண்ணீர்பழம், வெள்ளரிக்காய், வாழைப்பழம், மற்றும் மோர், சர்பத் போன்ற குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதில் முக்கியமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கோடை காலம் வரை தினம்தோறும் மோர் சர்பத் வழங்க உள்ளதாக ஏற்பாட்டாளர் பொன்மணி பாஸ்கரன் கூறினார். நிகழ்ச்சியில் எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் அக்ரோ தலைவர் காட்டாம்பூர் முருகேசன், மற்றும் எஸ்.புதூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் செய்திருந்தார்.


Next Story