தேனியில் இன்று நடைபெறும் 'நீட்' தேர்வை 792 பேர் எழுதுகின்றனர்


தேனியில் இன்று நடைபெறும் நீட் தேர்வை 792 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 7 May 2023 2:30 AM IST (Updated: 7 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் இன்று நடைபெறும் ‘நீட்’ தேர்வை 792 பேர் எழுதுகின்றனர்.

தேனி

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவன வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 792 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வு மையத்துக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகள் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும். கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story