13 இடங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மையம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கியது.
புதுக்கோட்டை
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு தொடர்பாக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் தலா ஒரு மையம் என்ற அடிப்படையில் 13 இடங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மையம் நேற்று முதல் தொடங்கியது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பயிற்சியானது தொடர்ந்து அளிக்கப்படும் 'நீட்' தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story