நீட் தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்
சங்கரன்கோவிலில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
சங்கரன்கோவில் ஏ.வெங்கடேஷ் நினைவு அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் ஏ.வி.கே. பள்ளி வளாகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக திருச்சூர் நீட் அகாடமி சார்பில் நீட், ஜெஇஇ படிப்புகளுக்கான பயிற்சி வகுப்பை ஏ.வி.கே பள்ளியின் தலைவர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஏ.வி.கே. பள்ளி முதல்வர் சுப்பிரமணியன், திருச்சூர் நீட் அகாடமி நிர்வாக இயக்குனர் சுனில், இயக்குனர் நாயர், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, முகமத் மன்சூர் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story