`நீட் தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் கருத்து


`நீட் தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் கருத்து
x

`நீட் தேர்வு எளிதாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கருத்துகள் கூறினர்.

கரூர்

எளிதாக இருந்தது

கரூர் இரும்பூதிபட்டியை சேர்ந்த அகத்தியன்:-

நீட் தேர்வு கொஞ்சம் எளிதாக இருந்தது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் உள்ள பாடத்தினை நன்றாக படித்திருந்ததால் தேர்வு எளிதாக இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் பார்முலா ஞாபகத்தில் இருந்தது. டிரஸ் கோடு சரியாக இருந்ததா என பார்த்தார்கள். இன்னும் கொஞ்சம் நீட் பயிற்சி பெற்றிருந்தால் இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம்

பயமாக இருந்தது

கரூர் வெங்கமேட்டை சேர்ந்த ஸ்ரீஹரி:-

கடந்த ஆண்டு உயிரியியல் பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்தன. இந்தாண்டு அதுபோல்தான் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் உயிரியில் பாடத்தில் கேள்விகள் சுலபமாக இருந்தன. வேதியியலும், இயற்பியலும் சுலபமாகதான் இருந்தது. தேர்வு எழுதுவதற்கு முன்பு சற்று பயமாக இருந்தது. பின்னர் கேள்வித்தாளை பார்த்ததும் நம்பிக்கை வந்துவிட்டது. நீட் தேர்வு எளிதாகத்தான் இருந்தது. இயற்பியல் கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் வேதியியல் சற்று கடினமாக இருந்தது. மொத்தத்தில் தேர்வு எளிதாக இருந்தது.

கட்டுப்பாடுகள் குறைவு

கரூரை சேர்ந்த சிவானி:-

கடந்த 10 நாட்களாக நீட் தேர்வு என்ற பயம் இருந்தது. தேர்வு மையத்திற்கு வந்தவுடன், மற்ற மாணவ, மாணவிகளை பார்த்ததும் தேர்வு பயம் சென்று விட்டது. கேள்விதாளில் முதலில் விலங்கியல் பாட கேள்விகளை தான் பார்த்தேன். அதில் எல்லாமே சுலபமாக இருந்தது. தாவரவியலிலும் ஒருசில கேள்விகளை தவிர மற்றவைகள் சுலபமாக இருந்தது. வேதியியலை பொறுத்தவரை கொஞ்சம் யோசித்து எழுதினால் சுலபமாக எழுதும் வகையில் இருந்தது. இயற்பியல் மட்டும் சற்று நேரம் ஒதுக்கி விடையளிக்கும் வகையில் இருந்தது. இன்றைய நீட் தேர்வு சுலபமாகதான் இருந்தது. நான் எதிர்பார்த்ததைபோல் தேர்வு சுலபமாக இருந்தது. கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தது. இந்தாண்டு கட்டுபாடுகள் சற்று குறைவாக இருந்ததாக தெரிகிறது.

கடினமாக இருக்கும் என நினைத்தேன்

கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த ஷோபிகண்ணன்:-

இன்றைய நீட் தேர்விற்காக கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி எடுத்து இருந்தால் அதிக மதிப்பெண்களை எடுத்து இருக்கலாம். நான் சில மாதங்களாக படித்து வந்தேன். இதனால் அதிகமாக பாடத்திட்டங்களை படிக்க முடியாமல் சென்று விட்டது. எனக்கு வேதியியல் கடினமாக இருந்தது. இயற்பியல் எளிதாக இருந்தது. உயிரியியல் விடையளிக்கும் வகையில் இருந்தது. நான் நீட் தேர்வு கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அந்தளவிற்கு கடினமாக இல்லை, எளிமையாகத்தான் இருந்தது. தேர்வு மையத்திற்குள் செல்லும் வரை பயம் இருந்தது. அதன்பிறகு பயம் சென்றுவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story