நீட் தேர்வு குளறுபடி விவகாரம்: ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகல் எங்கே? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி


நீட் தேர்வு குளறுபடி விவகாரம்: ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகல் எங்கே? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
x

நீட் தேர்வு குளறுபடி விவகாரத்தில் ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகலை தாக்கல் செய்ய நீட் தேர்வு முகமைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நீட் தேர்வு குளறுபடி விவகாரத்தில் ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகலை தாக்கல் செய்ய நீட் தேர்வு முகமைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் தன்னுடையது அல்ல என்று திருநெல்வேலியை சேர்ந்த எவல்ட் டேவிட் தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீட் தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வக்கீல், மாணவன் எழுதிய நுழைவு தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாளை தாக்கல் செய்தார். அப்போது, ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகலை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகலை வரும் வெள்ளிக்கிழமை அவசியம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார்.


Next Story