நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கு - பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது


நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கு -  பீகார் மாநிலத்தை சேர்ந்த  2 பேர் கைது
x

கோப்புக்காட்சி

நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தேனி,

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.

இந்தநிலையில், நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி கைது செய்துள்ளது. தேனி சிபிசிஐடி அலுவகலத்தில் வைத்து சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பீகாரை சேர்ந்த சாகித் சின்ஹா மற்றும் ரகுவன்ஸ் மணி ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story