தீயணைப்புத்துறை சார்பில் நீத்தார் நினைவுநாள் அனுசரிப்பு


தீயணைப்புத்துறை சார்பில் நீத்தார் நினைவுநாள் அனுசரிப்பு
x

திருச்சியில் தீயணைப்புத்துறை சார்பில் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சியில் தீயணைப்புத்துறை சார்பில் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இறந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக நாடுமுழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீத்தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

மலர்வளையம் வைத்து அஞ்சலி

இதையொட்டி தீயணைப்புத்துறை சார்பில் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவுத்தூணில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசியா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உதவி மாவட்ட அலுவலர்கள் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், முத்துப்பாண்டி, வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர், சத்தியவர்த்தனன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சமயபுரம்

சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. நிலைய அதிகாரி முத்துக்குமாரன் தலைமை தாங்கினார். நிலைய அலுவலகத்தின் முன்பாக உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் ஒருவாரத்துக்கு தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலும் உயிர்நீத்தார் நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Related Tags :
Next Story