நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு


நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு
x

நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கரூர்

கரூரில் நேற்று தீயணைப்புத்துறை அலுவலகத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது நினைவு ஸ்தூபி போல உபகரணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு மாவட்ட அலுவலர் ஜெகதீஸ் தலைமை தாங்கி, நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார், நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதேபோல் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலும், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலும் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

1 More update

Next Story