நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா


நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா

கோயம்புத்தூர்

நெகமம்

பொள்ளாச்சி அருகே, பெரிய நெகமம் தளி ரோட்டில் அமைந்துள்ளது வீரமாச்சியம்மன் கோவில். இந்த கோவில் திருவிழா, கடந்த, 31-ந்தேதி தொடங்கியது. திருமூர்த்தி மலை தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. கடந்த, 3-ந் தேதி கப்பளாங்கரை தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்று, இரவு, 10.30 மணிக்கு சக்தி அழைத்தல், அம்மன் அழைத்தல் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, விக்னேஷ்வர பூஜை, கலச பூஜை, பூர்ணாஹுதி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று முன்தினம், மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். அதன்பின், பக்தர்கள், அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். சுவாமி திருவீதி உலா, கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள், மஞ்சள் நீராட்டு விழா, நடந்தது. நேற்று மஹா அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை, பிரசாதம் வழங்கல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story