இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும், ஊடகத்துறை தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று நூலினை வெளியிட்டு பேசினார் . அவர் கூறியதாவது ,

இதை நூல் என்று கூறுவதை விட வரலாற்றின் கருவூலம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இந்நூல் நேருவின் வரலாறு மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறாகவும் இருக்கிறது. இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.ஒற்றை மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர்.வகுப்புவாதம், தேசியவாதம் சேர்ந்திருக்க முடியாது என சொன்னவர்.

இந்தி பேசாத மக்களிடம் இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்தார் நேரு. தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறதுஇந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.ஒற்றை மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர்.வகுப்புவாதம், தேசியவாதம் சேர்ந்திருக்க முடியாது என சொன்னவர்

ராகுல் காந்தியின் பேச்சு ஜவஹர்களால் நேரு பேசுவது போலவே உள்ளது. நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என கூறினார்.


Related Tags :
Next Story