நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, மாஞ்சோலை மைக்கேல், தமயந்தி, பொருளாளர் ஜார்ஜ்கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் தெரிவிப்பது, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி கட்சி கொடி ஏற்றுவது, இந்தி திணிப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பாசறை கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறுவது,
வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்க வேண்டும். தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை இல்லங்கள் தோறும், உள்ளங்கள் தோறும் எடுத்துக்கூறும் வகையில் தெருமுனை பிரசார கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், அம்பை நகராட்சி தலைவர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், சுடலைக்கண்ணு, சிவன்பாண்டியன் என்ற பரணிசேகர், முத்துப்பாண்டி என்ற பிரபு, ஜோசப்பெல்சி, ஞா.சேவியர்ராஜா, பி.சி.ராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிபாண்டி மற்றும் நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.