நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்
x

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

நெல்லை வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம், நெல்லை டவுன் ராஜமயில் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அசோகன், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், கவுரவ ஆலோசகர்கள் செல்வகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட இணை செயலாளர் சாலமோன், மாவட்ட துணை தலைவர்கள் அருள் இளங்கோ, மகாலிங்கம், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் நயன்சிங் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மானங்கள்

ஈரோட்டில் வருகிற மே மாதம் 5-ந்தேதி 40-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் உரிமை முழக்க மாநாட்டு நடக்கிறது. இதில் நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் 500 வாகனங்களில் வணிகர்கள் சென்று கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள், வணிகர்கள் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வணிகர்கள் சிரமத்தை போக்கும் வகையில் நெல்லை சந்திப்பு பகுதிக்குள் பஸ்கள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை- அம்பை சாலையில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பாளையங்கோட்டை காந்திமார்க்கெட் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்கள், வணிகர்கள் நலன்கருதி கடைகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் மீரான் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story