வருகிற ஏப்ரல் மாதம் முதல் நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்புக்கட்டண ரெயில் மீண்டும் இயக்கம்


வருகிற ஏப்ரல் மாதம் முதல் நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்புக்கட்டண ரெயில் மீண்டும் இயக்கம்
x

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மீண்டும் இயக்கப்பட உள்ளது.

மதுரை,

நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை, பழனி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் கடந்த ஒரு மாதமாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீண்டும் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06030) வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தென்காசிக்கும், நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரைக்கும் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06029) வருகிற ஏப்ரல் மாதம் 7-ந் தேதியில் இருந்து ஜூன் மாதம் 30-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி பெட்டியுடன் இணைந்த பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.


Next Story