நெல்லை: கோவில் திருவிழாவில் பரோட்டா அன்னதானம் - மாற்றி யோசித்த இளைஞர்கள்...!
நெல்லை அருகே கோவில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு பரோட்டா அன்னதானம் வழங்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் முக்கூடலில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆடிமாத திருவிழா நடைபெற்ற வருகின்றது. அந்த வகையில் திருவிழாவின் 7-ம் நாள் அன்று ஸ்ரீமன் நாராயணசாமி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழகப்பட்டது. பொதுவாக அன்னதானம் என்றால் கூட்டு, பொரில் கலந்த உணவாக இருக்கும். ஆனால் இப்பகுதி இளைஞர்கள் சற்று மாற்றி யோசித்து பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா வழங்கினர்.
200 கிலோ மைதா மாவை கொண்டு சுமார் 8 ஆயிரம் பரோட்டாவை அப்பகுதி இளைஞர்கள் முயற்சியில் தயார் செய்யப்பட்டு பரோட்டா அன்னதானம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story