நெல்லையப்பர் கோவில் நிலங்களை ஆய்வு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டன
மானூர் அருகே நெல்லையப்பர் கோவில் நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து எல்லைக்கற்கள் நட்டினர்.
திருநெல்வேலி
மானூர்:
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் மானூர் அருகே உள்ள பள்ளிக்கோட்டை கிராமம், பள்ளமடை பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு நேற்று எல்லை கற்கள் நடப்பட்டன.
அப்போது அறநிலைய துறையின் தாசில்தார் இந்திரா காந்தி, செயல் அலுவலர் அய்யர் மணி, சர்வேயர்கள் பாலகுருசாமி, ஆனந்தசுதன், சவுந்தர்ராஜன் மற்றும் எழுத்தர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story