நெல்லையப்பர் கோவில் வருசாபிஷேக விழா
நெல்லையப்பர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
திருநெல்வேலி
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் நடந்த நாளில் வருசாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதியில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மகா கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா சென்றனர்.
Related Tags :
Next Story