நெல்லூர்பேட்டை, ஓட்டேரி ஏரிகள் நிரம்பின


நெல்லூர்பேட்டை, ஓட்டேரி ஏரிகள் நிரம்பின
x

நெல்லூர்பேட்டை, ஓட்டேரி ஏரிகள் நிரம்பிதால் மலர்தூவி, இனிப்பு வழங்கினர்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை நிரம்பி வழிவதாலும், அடிக்கடி பலத்த மழை பெய்வதாலும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பி வழிந்தது. செட்டிகுப்பம் ஓட்டேரியும் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிகிறது. ஏரி நிரம்பி வழியும் பகுதிகளில் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் மலர்கள் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நத்தம் பிரதீஷ், செட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இந்திரா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.மலர்வேணி, செல்விபாபு உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஏரி பாசன சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் ரா.சி.தலித்குமார் நெல்லூர் பேட்டை ஏரி நிரம்பி வழியும் இடத்தில் மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.


Next Story