நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நெமிலி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நெமிலி கல்லாறில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் துணைத்தலைவர் தீனதயாளன், பொறியாளர் ராஜேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

---


Next Story