நெமிலி பேரூராட்சி மன்றக்கூட்டம்


நெமிலி பேரூராட்சி மன்றக்கூட்டம்
x

நெமிலி பேரூராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செய்யவேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் வெங்கடேசன், திட்டக்குழு உறுப்பினர் காஞ்சனா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story