நெமிலி ஒன்றியக்குழு கூட்டம்


நெமிலி ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 11:15 PM IST (Updated: 29 Jun 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் வடிவேலு தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம், சிறுணமல்லி, பின்னாவரம், கீழ்வீதி பகுதிகளில் சமுதாய கூடம் அமைக்கவும், சிறுணமல்லி கல்லாறு மற்றும் நெமிலி கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் அமைக்ககோரியும், சேந்தமங்கலம் உள்ளிட்ட 12 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டக்கோரியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக மற்றும் பிறதுறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


Next Story