விருதுநகரில் 4 இடங்களில் நீர்மோர் பந்தல்கள்


விருதுநகரில் 4 இடங்களில் நீர்மோர் பந்தல்கள்
x

அ.தி.மு.க. சார்பில் விருதுநகரில் 4 இடங்களில் நீர்மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகரில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, நகரச்செயலாளர் முகமது நைனார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று விருதுநகர் அல்லம்பட்டியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.கே கண்ணனும், பாண்டியன் நகரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கமும், பி.ஆர்.சி. பணிமனை முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் மச்ச ராஜாவும் ஏற்பாடு செய்திருந்த நீர்மோர் பந்தல்களையும் முன்னாள் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story