மணல் கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு


மணல் கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
x

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே தெளிமேடு தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளையும், மணல் மூட்டைகளையும் அங்கேயே போட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். விசாரணையில் அந்த நபர், தெளி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பதும், அங்குள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளையும், மணல் மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு மணிகண்டனை தேடி வருகின்றனர்.


Next Story