நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள் பழைய பஸ் நிலையத்திற்கு மாற்றம்


நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள் பழைய பஸ் நிலையத்திற்கு மாற்றம்
x

வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள் பழைய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

வேலூர்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வேலூர் சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் இங்கு விற்கப்படுகிறது.

இதனால் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அங்குள்ள கால்வாய் தூர்ந்து போனதாலும், சாலை வசதி இல்லாததாலும் பொதுமக்களும், வணிகர்களும் அவதி அடைந்து வந்தனர். ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளாலும் மார்க்கெட் பகுதி அலங்கோலமாக காட்சியளித்தது.

இந்த நிலையில் அங்கு சாலை மற்றும் கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள காய்கறி கடைகள் வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த கடைகள் பழைய பஸ் நிலையப் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நேதாஜி மார்க்கெட்டில் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் காய்கறி கடைகள் அங்கு மாற்றப்படும் என்றனர்.


Related Tags :
Next Story