தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை


தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
x

திண்டுக்கல் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2016-ம் அண்டு தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 48 வார்டுகளிலும் சுமார் 7 ஆயிரம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி 4 ஆயிரத்து 487 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.


இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை பெருக தொடங்கின. இதைத்தொடர்ந்து தற்போது தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதற்காக தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, மலைக்கோட்டை அருகே உள்ள மாநகராட்சி கூடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.


அங்கு கால்நடை மருத்துவர் மூலம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்கள் 5 நாட்கள் பராமரிப்புக்கு பின்னர் பிடிக்கப்பட்ட இடத்திலேயே அவை விடப்படுகின்றன. இதன்மூலம் தெருநாய்களின் பெருக்கம் கணிசமாக கட்டுப்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Next Story