தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை


தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 19 Dec 2022 12:30 AM IST (Updated: 19 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.

தேனி

பெரியகுளம் நகராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது. தெரு நாய்களை பிடிக்க பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன் ஆகியோர் உத்தரவின்பேரில் பெரியகுளம் நகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து தெரு நாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் நெல்லை மாஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடத்தியது. இந்த முகாமில் கருத்தடை அறுவை சிகிச்சை பணியை நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், ஆணையாளர் புனிதன், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர் மற்றும் அரசு வக்கீல் சிவக்குமார், கவுன்சிலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். இதேபோல் நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும் நகர்பகுதியில் நாய்களை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய விரும்பினால் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story