புதிதாக 11 வாக்குச்சாவடிகள் அமைப்பு -கலெக்டர் தகவல்


புதிதாக 11 வாக்குச்சாவடிகள் அமைப்பு -கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:30 AM IST (Updated: 27 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 11 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அவை பிரிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தவும், வாக்காளர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவிற்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றினை வாக்காளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 148 சம்சிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் எண் 150 வீராணபுரம் வசந்தா தொடக்கப்பள்ளி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் இருந்து மறு சீரமைப்பு செய்து எண் 151 புதிய வாக்குச்சாவடியாக மலையடிபட்டி ஹரிஜன் தொடக்கப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

தென்காசி, ஆலங்குளம்

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 64 காட்டுபாவா நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை 2-ஆக பிரித்து புதிதாக எண் 65 புதிய வாக்குச்சாவடி அதே பள்ளி கட்டிட அமைவிடத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக 9 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டு எண் 3 கீழப்பாவூர் சோமசுந்தரம் இந்து தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியை 2-ஆக பிரித்து ராஜபாண்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் புதிதாக எண் 4 வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உடையாம்புளி எண் 129 இந்து நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி 2-ஆக பிரித்து புதிதாக 131 கொல்லன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது. துப்பாக்குடி எண் 154 பாரதி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி 2-ஆக பிரித்து புதிதாக வாக்குச்சாவடி எண் 157 துப்பாக்குடி இ-சேவை மையத்தில் செயல்பட உருவாக்கப்பட்டது. எண் 170 லட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் 173 வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்து எண் 174 அழகம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது.

எண் 178 தெற்கு மடத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி 2-ஆக பிரித்து 183 காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், எண் 189 செக்கடியூர் கீழக்கடையம் வீர உலகம்மாள் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி 2-ஆக பிரித்து எண் 195 கேளையாப்பிள்ளையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது.

எண் 225 சிவசைலம் ஸ்ரீ ஆத்ரி கலாநிலைய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி 2-ஆக பிரித்து எண் 232 பெத்தான்பிள்ளை குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது. எண் 244 ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி மற்றும் 245 சிவசைலம் அவ்வை ஆசிரமம் வாக்குச்சாவடிகளை மறு சீரமைத்து எண் 252 செங்கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது. எண் 305 வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியை இரண்டாக பிரித்து 314 அரசன் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது.

11 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள 40 வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக அதே இடத்தில் உள்ள புதிய கட்டிடங்களுக்கும் அருகே உள்ள அரசு கட்டிடங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம் மாற்றங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள https/tenkasi.nic.in/election என்ற மாவட்ட இணையதள முகவரியில் உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி சீரமைப்புக்கு முன்பு உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1506 ஆகும். மறுசீரமைப்புக்கு பின்பு உள்ள வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 1517. இதில் புதிதாக 11 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் அமைவிடம் மாற்றம் 11, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 8 ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story