புதிய மின்மாற்றி
கங்கைகொண்டான் பேரூராட்சியில் புதிய மின்மாற்றி
மந்தாரக்குப்பம்
கங்கைகொண்டன் பேரூராட்சி 1, 2, 3 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மின்மாற்றி அடிக்கடி பழுதடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் கோாிக்கை வைத்தனர்.
இதையடுத்து மின்வாரியம் சார்பில் பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பரிதா அப்பாஸ் முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணகி தலைமை தாங்கி புதிய மின்மாற்றியை இயக்கி வைத்து மின்வினியோகத்தை தொடங்கி வைத்தார். இதில் மந்தாரக்குப்பம் உதவி பொறியாளர்கள் பாலும்பழம், வெங்கட், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதா, அறிவழகன், கலா வேல்முருகன், பேரூராட்சி பணியாளர் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.