ரூ.22 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்; துணை மேயர் அடிக்கல் நாட்டினார்


ரூ.22 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்; துணை மேயர் அடிக்கல் நாட்டினார்
x

நெல்லை தச்சநல்லூரில் ரூ.22 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் 1-வது வார்டு சீனியப்பன் திருத்து பகுதியில் ரூ.22 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் கவுன்சிலர் சங்கர், தி.மு.க. மாநகர பிரதிநிதி பால் இசக்கி, வட்ட செயலாளர் பிரேம் கணேசன், வட்ட பிரதிநிதி நெல்லையப்பன், மாயா, திருவடி, வட்ட துணை செயலாளர் அரிராமன், முத்துமாரியப்பன், அங்கன்வாடி பணியாளர்கள் தங்கம் விஜயகுமாரி, விசாலாட்சி, முத்துலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story