புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு விழா


புதிய அங்கன்வாடி மைய  கட்டிடங்கள் திறப்பு விழா
x

நெல்லையில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நகராட்சி மணலோடை தெருவில் உள்ள தங்கம்மன் தளவாய் மாடசாமி கோவில் அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10.50 லட்சம் மதிப்பிலும், சேனையர் மாயாண்டி கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் ெதாகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பிலும் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றை அம்பை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் பாண்டியன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நகரசபை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் சொர்ணலதா வரவேற்றார். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் ராமசாமி, கோதர் இஸ்மாயில், நகராட்சி என்ஜினீயர் பாலாஜி, நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கல்யாணராமன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story