புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொம்மடிக்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

கொம்மடிக்கோட்டை சந்தோசம் நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தர்மேந்திரராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜாண்சன் ஜெபக்குமார் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story