தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளை - இயக்குனர் காமகோடி தகவல்


தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளை - இயக்குனர் காமகோடி தகவல்
x

ஒரு ஐ.ஐ.டி.யின் கிளையை வேறு இடத்தில் தொடங்க இருப்பது இதுவே முதல் முறை என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளையை தொடங்க உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது பாரத தேசத்தின் அடிப்படையே அறிவை பகிர்வது தான் என்றும், கல்வியை வியாபாரமாக நாம் பார்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு ஐ.ஐ.டி.யின் கிளையை வேறு இடத்தில் தொடங்க இருப்பது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்ட அவர், இதற்கு தான்சானியா அரசும், நமது அரசும் முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.



1 More update

Next Story