திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் மாயம்


திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் மாயம்
x

திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் மாயம்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மதுக்கரையை சேர்ந்தவர் 39 வயது பட்டதாரி. இவருக்கும் 33 வயது பெண் ஒருவருக்கும் இடையே கடந்த 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி புதுத்தம்பதியினர் துணி எடுப்பதற்காக ஒப்பணக்காரவீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றனர். அங்கு இருவரும் துணிகளை தேர்வு செய்துகொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த பெண்ணை காணவில்லை.

பெண்ணின் கணவர், அவரை அங்கு தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. வீடு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பெண்ணின் வீட்டில் தேடிப்பார்த்தார். அங்கும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் கோவை பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story