ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் வேண்டும்


ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் வேண்டும்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தெப்பக்குளத்தின் தெற்கு கரையில் 1-ம் எண் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் அப்பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த ேரஷன் கடை செயல்பட்டு வரும் கட்டிடம் பல ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும்.

தற்போது கட்டிடம் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் அரிப்பு ஏற்பட்டு உடைந்து விழுந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த ரேஷன் கடைக்கு வருவதற்கு பணியாளர்களும், பொதுமக்களும் அச்சம் அடைகின்றனர். மழை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story