ரூ.3.58 கோடியில் புதிய கட்டிடம்
ரூ.3.58 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
மானாமதுரை,
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை, துணை தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை வரவேற்றார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார்.
இதில், மாவட்ட துணை செயலாளர் ேசங்கைமாறன், மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினி தேவி, சங்கரா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல், பொறியாளர்கள் கார்த்தியினி, கங்காதேவி விஜயலட்சுமி, மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகர் செயலாளர் பொன்னுச்சாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ஜெயமூர்த்தி, நகர் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் (கட்டிக்குளம்)சாந்தி தமிழ்நேசன், (சின்ன கண்ணனூர்) அங்குசாமி, (இடைக்காட்டூர்) சண்முகநாதன், (மாங்குளம்) முருக வள்ளி தேசிங்கு ராஜா, (தஞ்சாகூர்) அன்பு செல்வி, சன்னதிபுதுகுளம் வாசுகி முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி மூர்த்தி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நெசவாளர் அணி அமைப்பாளர் பால்பாண்டி, நகர் மாணவரணி அமைப்பாளர் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மானாமதுரை யூனியன் மேலாளர் தவமணி செய்திருந்தார்.