குட்டத்துப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமிபூஜை


குட்டத்துப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 8 March 2023 9:00 PM GMT (Updated: 8 March 2023 9:00 PM GMT)

திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமிபூஜையை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டத்துப்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் தண்டபாணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 90 சதவீதம் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை பொறுத்தமட்டில் விடுபட்ட முதியோர்களுக்கு உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். ஆத்தூர் தொகுதியில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.550 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதி வருவதற்கு முன்பு ரெட்டியார்சந்திரம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.120 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்க உள்ளது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் குட்டத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி அரிச்சந்திரன், துணைத்தலைவர் விசுவாசம் அருளப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சுதா செல்விராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் திருப்பதி, சுமதி கணேசன், சுரேஷ், ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, திருமலைசாமி, ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், கட்சி பொறுப்பாளர்கள் குமரேசன், விவேகானந்தன், பொன் முருகன், உதயகுமார், கரிசல்பட்டி ஜோசப் ஆசான், ஊராட்சி மன்ற தலைவர்கள் பால்ராஜ் (கரிசல்பட்டி), தங்கப்பாண்டி (கோனூர்), இன்பராஜ் (அனுமந்தராயன்கோட்டை), கொத்தபுள்ளி ஊராட்சி துணைத்தலைவர் ரங்கசாமி, ஒப்பந்ததாரர் கந்தசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அனுமந்தராயன்கோட்டையில் தரைமட்ட தொட்டி மூலம் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


Related Tags :
Next Story