ரூ.26 லட்சத்தில் புதிய கட்டிடம்


ரூ.26 லட்சத்தில் புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 5 Oct 2023 9:00 PM GMT (Updated: 5 Oct 2023 9:00 PM GMT)

கடநாடு ஊராட்சி அலுவலகத்துக்கு ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை ஆ.ராசா. எம்.பி. திறந்து வைத்தார்.

நீலகிரி

கடநாடு ஊராட்சி அலுவலகத்துக்கு ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை ஆ.ராசா. எம்.பி. திறந்து வைத்தார்.

ஊராட்சி அலுவலகம்

ஊட்டி ஒன்றியம் கடநாடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 2018-19-ம் ஆண்டு ராஷ்டிரிய கிராம சுவராஜ் அபியான் திட்டம் மற்றும் 2021-22-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.26.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம், தூனேரி ஊராட்சி அணிக்கொரை கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் என மொத்தம் ரூ.46.80 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை நீலகிரி எம்.பி. ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

ரேஷன் கடை

இதைத்தொடர்ந்து குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் குன்னூர் ஐதர் கார்டன் முதல் வண்ணாரப்பேட்டைவரை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைபாதை பணியையும், காட்டேரி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, ஆர்.டி.ஓ. மகராஜ், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், துணைத்தலைவர்கள் வாசிம்ராஜா, ரவிக்குமார், ஊட்டி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஸ்ரீதரன், ஊராட்சி தலைவர்கள் சங்கீதா (கடநாடு), உமாவதி (தூனேரி) ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story