ரூ.3 கோடியே 20 லட்சத்தில் புதிய கட்டிடம்
திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் ரூ.3 கோடியே 20 லட்சத்தில் புதிய கட்டிடம் ராமலிங்கம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மாலினி வரவேற்றார். விழாவில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை ராமலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் உதவி கலெக்டர் அர்ச்சனா, சீர்காழி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயஸ்வரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சுவாமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் முருகன் நன்றி கூறினார்.