ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம்


ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2 Oct 2022 6:45 PM GMT)

திண்டிவனம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்தார்

விழுப்புரம்

திண்டிவனம்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி

திண்டிவனம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு தற்காலிகமாக மாற்று இடம் வழங்கும் வகையில் முருங்கப்பாக்கம் பகுதியில் உள்ள நீதிபதிகள் பழைய குடியிருப்பை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தற்காலிகமாக...

தற்போது மாணவர்கள் தங்கி வரும் விடுதி கட்டிடம் சேதம் அடைந்துள்ளதால் அதற்கு பதிலாக புதிய விடுதி கட்டிடம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்கள் நலன்கருதி ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பழைய விடுதி கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

தற்போது கல்லூரி நடைபெற்று கொண்டிருப்பதால் மாணவர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மாற்று இடமாக இந்த நீதிபதிகள் பழைய குடியிருப்பை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத், மாவட்ட ஆதிதிராவிட அலுவலர் ரகுகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, திண்டிவனம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story