பட்டாசு ஆராய்ச்சி மையத்துக்குரூ.15 கோடியில் புதிய கட்டிடம்


பட்டாசு ஆராய்ச்சி மையத்துக்குரூ.15 கோடியில் புதிய கட்டிடம்
x

சிவகாசி அருகே பட்டாசு ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.15 கோடியில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே பட்டாசு ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.15 கோடியில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

ஆராய்ச்சி மையம்

சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் டான்பாமா சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் பட்டாசு வேதிப்ெபாருள் ஆராய்ச்சி மையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த கட்டிடத்திற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சக இயக்குனர் வேட் பிரகாஷ் மிஸ்ரா காணொலிக்காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

டான்பாமா தலைவர் கணேசன், துணை தலைவர்கள் ராஜரத்தினம், அபிரூபன், பொதுசெயலாளர் பாலாஜி, பொருளாளர் சீனிவாசன், நீரி தலைமை விஞ்ஞானி சாதனாராயலு ஆகியோர் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

வேதிப்பொருட்கள்

பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிடம் 5 ஏக்கர் பரப்பில் அமையவுள்ளது. இதுகுறித்து நீரி தலைமை விஞ்ஞானி சாதனாராயலு கூறுகையில், சிவகாசியில் அமைய உள்ள ஆராய்ச்சி மைய கட்டிடத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் பெற்ற வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதிலும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுமதிக்கபடும்.

இதேபோல் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தபடும் மூலப்பொருட்களின் தரமும் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு சான்றிதழ்

இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்த முடியும். பட்டாசு ஆலைகளில் மாசில்லா பட்டாசுகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி மையம் உறுதுணையாக இருக்கும்.

சிவகாசியி்ல் உள்ள 950 பட்டாசு ஆலைகள் நீரியில் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன. ஆராய்ச்சி மைய கட்டிட பணிகள் நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஆராய்ச்சி மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆராய்ச்சி மையத்திற்கு தேவையான அனைத்து கருவிகளும் ஏற்கனவே வாங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story