அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்
புதிய பள்ளி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு எண் 1, 2 ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய திருப்புவனம் மேற்கு பள்ளியில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் கண்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் லதாதேவி, பால்பாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, யூனியன் துணைத் தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வி ரவி, ராமலெட்சுமி பாலகிருஷ்ணன், மாரிதாசன், பத்மாவதி முத்துக்குமார், ஜனதா செல்வபிரகாஷ், கண்ணன், பாலகிருஷ்ணன் மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அண்ணாமலை, மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், மகளிர் அணி அழகுப்பிள்ளை குணசேகரன், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், மாணவர் அணி பாண்டியகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.