ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம்


ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம்
x

ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம் பூமி பூஜை தொடங்கியது

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

பகண்டைகூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழுதடைந்ததை அடுத்து புதிய அலுவலகம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 44 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், ஒன்றியக்குழு துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் தீபா அய்யனார், வசந்தகுமாரி லிங்கநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story