ரூ.33¾ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு


ரூ.33¾ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு
x

ரூ.33¾ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அயினாபுரத்தில் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்க கட்டிடம், ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடம் என மொத்தம் ரூ.33.87 லட்சம் மதிப்பீட்டிலான 3 புதிய கட்டிடங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ஏழை, எளிய மக்கள் நலனில் அக்கறை கொண்டதன் காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு சிறப்பான திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்தி வருவதால், நாட்டில் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக செயல்பட்டு பிற மாநில முதல்-அமைச்சர்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார், என்றார்.

இதைத்தொடர்ந்து பாலம்பாடி, ஜெமின் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மாக்காய்குளம், அருணகிரிமங்கலம், திம்மூர், மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் சிவசங்கர், அந்த மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story