வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் 8 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், தேனியில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் சேந்தமங்கலம் மற்றும் பள்ளியாடி ஆகிய இடங்களில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும், 7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள், 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்கள், 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் மற்றும் 2 புதிய பதிவு மாவட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story