பள்ளி, ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள்


பள்ளி, ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள்
x

தினையத்தூர், நகரிகாத்தான் கிராமங்களில் பள்ளி, ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை கருமாணிக்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

தினையத்தூர், நகரிகாத்தான் கிராமங்களில் பள்ளி, ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை கருமாணிக்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா

திருவாடானை தாலுகா, பாண்டுகுடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 2 வகுப்பறை கூடுதலாக பள்ளிக்கட்டிடம் கட்டவும், நகரிகாத்தான் கிராமத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டவும். அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கோடனூர் சாந்தா கணேசன், ஊராட்சி தலைவர்கள் பாண்டுகுடி சிங்கத்துரை, நகரிகாத்தான் புவுலின்மேரி அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் புதிய துணை சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்று கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் திருவாடானை தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பதனக்குடி எஸ்.ரவி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கோடனூர் கணேசன், பதனக்குடி தட்சணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி, தினையத்தூர் பள்ளி தலைமை ஆசிரியை சகாயராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தேளூர் ஐயப்பன், ஒன்றிய பொறியாளர் பாலகுமார், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர்கள் முருகானந்தம், ஓரியூர் மனோகரன், எட்டுகுடி மரியஅருள், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் குளத்தூர் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகேயன் ராஜா, ஜெயசீலா கண்ணன், அருணாச்சலம், ஊராட்சி தலைவர்கள் மங்கலக்குடி அப்துல் ஹக்கீம், அரசத்தூர் முருகேஸ்வரி சரவணன், நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story