சாத்தூர் பகுதிகளில் புதிய கட்டிடங்கள்


சாத்தூர் பகுதிகளில் புதிய கட்டிடங்கள்
x

சாத்தூர் பகுதிகளில் புதிய கட்டிடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே உள்ள நள்ளியில் மகளிர் சுகாதார வளாகம், என்.சுப்பையாபுரத்தில் ரேஷன் கடை, உப்பத்தூரில் கலையரங்கம், நாருகாபுரத்தில் சமுதாயக்கூடம், சமையலறை மற்றும் மயான தடுப்பு சுவர், பொட்டல்பச்சேரியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, எம்.நாகலாபுரத்தில் விவசாய வேளாண்மை கட்டிடம் ஆகிய கட்டிடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி, வருவாய் ஆய்வாளர் குருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Next Story